பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்தை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம், சட்டத்தை அனைவருக்கும் பொதுவான முறையில் அமல்படுத்த வேண்டும், பாரபட்சம் காட்டக்கூடாது என்று காவல்துறைக்கு அறிவுரை வழங்கினார்.
ஊடகத் துறையில் பெண்களின் பணி பாதுகாப்பு, செயல்பாடுகளை அவமதிப்பது போல் தோன்றினாலும், ஆண் செய்தியாளர்களையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஒருவர் எழுதிய பேஸ்புக் கருத்தை தனது முகநூலில் பகிர்ந்தார் நடிகர் எஸ்.வி.சேகர். பின்னர் அவர் அதனை நீக்கிவிட்டாலும், அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகரை போலீஸார் கைது செய்து விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எஸ்.வி.சேகர் பகிர்ந்த பேஸ்புக் கருத்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏப்.20 இல் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து சென்னை மாநகரக் காவல் துறை, எஸ்.வி.சேகர் மீது இந்தியக் குற்றப் பிரிவுகள் 504, 505 ( 1 ) (C), 509, பெண்கள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் 2002 (4) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகி, கைதாகாமல் இருக்க தலைமறைவாக இருக்கிறார் எஸ்.வி.சேகர். அவரது முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, பத்திரிக்கையாளர்கள் அமைப்பு மற்றும் தனிநபர்கள் சார்பில் முன் ஜாமீன் மனு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து மனு வழங்கப்பட்டது.
தொடர்ந்து இன்று முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு பத்திரிக்கை யாளர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எஸ்.வி.சேகர் தேசியக் கட்சியில் இருப்பதால் அவர் மீது புகார் அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுக்கும் நிலை உள்ளதாகவும், அதனால் அவருக்கு ஜாமீன் வழங்காமல் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து, நீதிபதி எஸ்.வி.சேகரைக் கைது செய்து விசாரிக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதனால் எஸ்.வி.சேகரை காவல்துறை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கைத௠செய