திமுக.,வுக்கு போட்டியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறாரோ இல்லையோ… திமுக., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கடும் போட்டியையும் சவாலையும் கொடுத்து வருகிறார் ம.நீ. மய்யத் தலைவர் கமல்ஹாசன்.
அண்மைக் காலமாக, கமல்ஹாசனும் புரியாத மொழியில் டிவிட்டரில் கருத்துகளை எழுதுவது போல், பேச்சிலும் புரியாத மொழியில் பிளந்து கட்டுவார். இப்போது, ஸ்டாலினுக்கு போட்டியாக குடியரசு தினம் சுதந்திர தினம் என்பதில் எல்லாம் குளறுபடிகளைக் கொட்டத் தொடங்கியுள்ளார்.
ஸ்டாலின் இப்படி குடியரசு தினத்தை சுதந்திர தினத்தை குழப்பி எடுத்து மேடையில் முழங்கி, பலரின் கேலிப் பேச்சுக்கு ஆளானார். இப்போது கமல்ஹாசன் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.
அண்மையில் தமது மக்கள் நீதி மய்யத்தின் கூட்டத்தில் பேசிய போது, இந்த மாநாட்டுக்கு வந்து கலந்து கொள்கிறீர்களோ அதே கடமை உணர்வுடன், அதே பெருமையுடன், அதில் கலந்து கொள்ள வேண்டும். அது வந்து ஜன 36ங்க.. மே 1 ஆம் தே ஆகஸ்ட் 15 காந்தி.. காந்தியார் பிறந்த நாள்.. அக்டோபர் 2.. இந்த நான்கு தினங்களிலும் என்று பேசிக் கொண்டு போகிறார் கமல் ஹாசன்.
இது இப்போது இணையதளங்களில் பலரின் கேலிக்கும் உள்ளாகியுள்ளது.