திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா இவர் மீது திருநெல்வேலி ,கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் 4 கொலை வழக்குகள் மற்றும் 16 கொலைமுயற்சி வழக்குகள் போன்ற பல வழக்குகள் உள்ளன மேலும், பாளையங்கோட்டையில் பேராசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜாவை போலீசார் நேற்று சென்னையில் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகப்பாண்டியன் என்கிற ராக்கெட்ராஜா ரவுடித்தொழிலில் 25 ஆண்டுகளை நிறைவு பெற்றதை சென்னையில் அடுத்து நட்சத்திர விடுதியில் நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்ற காவல் துறையினர் ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் சுந்தர் ,ராஜசுந்தார் ,பிரகாஷ் ,நந்தகோபால் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.இவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத துப்பாகியுடன் இருந்த குற்றத்திற்காக படைகலன் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.