கோவை: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ கைவிட்டதாக கோவை தலைமை முதன்மை அமர்வு நீதிமன்றம், விஷ்ணு பிரியாவின் தந்தை ரவிக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் மே 9 ஆம் தேதி ஆஜராகி தெரிவிக்கும்படி, சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரில் ஆஜராகி கருத்தை தெரிவிக்கும்படி தெரிவிக்கப் பட்டிருந்ததால், தந்தை ரவி நேரில் ஆஜரானார்.
இதை அடுத்து, இந்த வழக்கில் சாகும் வரை விட மாட்டேன் என்று ரவி கூறியுள்ளார். மேலும், மே 24ஆம் தேதிக்கு விஷ்ணு பிரியா மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் மனு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை அறிக்கையை படித்த பிறகு எங்கள் தரப்பு ஆட்சேபனைகளை முன்வைப்போம் என்று கூறினார் ரவி. இந்த வழக்கு வழக்கு விசாரணை திருப்தியளிக்கவில்லை என்று ரவி தரப்பு வழக்கறிஞர் அனிதா தகவல் தெரிவித்துள்ளார்.
விஷ்ணுபிரியாவின் மரணம், தற்கொலை தான் என முடிவு செய்ததால், வழக்கை சிபிஐ கைவிடுவதாக அறிவித்தது குறிப்பிடத் தக்கது.