மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை சந்திக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் குமரி மாவட்டம் நாகர்கோவில் சென்றார். குமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளுக்கு
சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார்.
பின்னர் அவர் நாளை காலை தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீனவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிர குளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.
பின்பு ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன் கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். 18-ந்தேதி பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.



