நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே வட்டலூர் விலக்கில் கார் மீது லாரி மோதி விபத்தில் காரை ஓட்டிய தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர்
மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி இடிபாடுகளில் சிக்கிய உடலை மீட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் தென்காசி – திருநெல்வேலி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



