மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்ய ஆட்சேபனை தெரிவித்து எந்த மனுவும் வரவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆட்சேபனை இருந்தால் மே 31க்குள் தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கட்சியை பதிவு செய்வது தொடர்பாக ஜூன் 20ம் தேதி, கட்சி நிர்வாகிகள் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அன்றைய தினம் சின்னம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவிக்க வாய்ப்பு நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




