தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.
கடந்த மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரத்தைக் கட்டுப்படுத்த, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியாக உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்பட்ட அந்தோணி செல்வராஜின் உடல் 13-வது உடலாக அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




