குமரி: கன்னியாகுமரியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப் பட்டுள்ளது.
இதுவரை ரூ.34 வசூலிக்கப் பட்டு வந்த நிலையில், இனி ரூ.50 ஆகவும், சிறப்பு கட்டணம் ரூ.169ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்த்தப் பட்டுள்ளது.
அதுபோல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டணமும் ரூ.17ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.




