ஜிப்மர் நுழைவுத் தேர்விலும் அசத்தியவர்கள்! நீட்டில் 12ம் இடம், ஜிப்மரில் 5ம் இடம் பிடித்த கல்பனா!

Published:

JIPMER MBBS - 2026

  • நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகார் மாநிலத்தை சார்ந்த கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33 வது இடம்…..
  • நீட் தேர்வில் இந்திய அளவில் 12 ம் இடம் பிடித்த தமிழ்நாட்டை சார்ந்த கீர்த்தனா ஜிப்மர் தேர்வில் 5 ம் இடம்பெற்று சாதனை புரிந்துள்ளார்..!!!

புதுச்சேரி ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வு  முடிவுகள் நேற்று மாலை ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 5ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இவர் ஏற்கனவே நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 12ம் இடமும் தமிழக அளவில் முதலிடம் பெற்றவர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள் மட்டுமின்றி காரைக்கால் கிளையில் 50 இடங்கள் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப நடப்பாண்டுக்கான  நுழைவு தேர்வு கடந்த 3ம் தேதி அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் இருபிரிவாக நடைபெற்றது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இந்தியாவில் 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் நடைபெற்ற தேர்வில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் 7 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 1,796 பேர் பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் ஜிப்மரின் www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.in  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று மாலை  வெளியிடப்பட்டது. அதில், அகில இந்திய அளவில் அன்கதல அனிருத பாபு (99.9987) முதலிடமும், அகில் தம்பி (99.9986) 2ம் இடமும், ப்ரேராக் திரிபாதி (99.9975) 3ம் இடமும், அமிதாப் பங்கஜ் சவுகான் (99.9973) 4ம் இடத்தை பிடித்துள்ளனர்.

கீர்த்தனா 99.996 மதிப்பெண்: மருத்துவ படிப்பிற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வில் தேசிய அளவில் 12ம் இடமும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்த கீர்த்தனா, ஜிப்மர் நுழைவு தேர்வில் 99.996 சதவீத  மதிப்பெண்களுடன் 5ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இதேபோல் புதுச்சேரி பொதுப்பிரிவில் அக்‌ஷய் (99.7083), விக்னேஷ் ராமன் (99.560), ரக்‌ஷா (98.877), சரவணன் (98.603) ஹர்ஷிதா (98.524) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜுலை 4ம் தேதியிலிருந்து துவங்கவுள்ளது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தகவல்: கல்வி பாலம் நிருபர் குழு

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img