சீமான், அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் அமைதியையும் வளர்ச்சியையும் கெடுக்கும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.




