போதை பொருள் வைத்திருந்ததாக ஏ.பி.ஆர்.ஓ ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு, உதவி மக்கள் தொடர்பு அலுவலராகவ் பணி புரிந்து வருபவர் அருண். இவர் நேற்று இரவு தனது காரில் போதைப் பொருளான கொக்கைன் 1/4 கிலோ வைத்திருந்ததாகக் கூறி மத்திய போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் அருணை கைது செய்துள்ளனர் .
அருண் திண்டுக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி என்பவரின் மகன் என்பது குறிப்பிடதக்கது.




