மதுரை: தமிழக ஆலயப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதனிடையே அறநிலையத்துறை 21 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோயில் பணியாளர்கள் பென்சன், ஏழாவது சம்பளக் கமிஷன், ஊதிய முரண்பாடுகள் ஆகியவற்றை தீர்க்கக் கோரி கடந்த சில நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை அறநிலையத்துறை ஆலயப் பணியாளர்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை இன்று தமிழகம் முழுவதும் கோயில் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், இது குறித்து அறிந்த அறநிலையத்துறை உயர் அலுவலர்கள், அதிகாரிகளுடன் பேசி பல்வேறு கோரிக்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். இதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.




