
பால் திருட்டு புகார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு காவல் ஆணையாளர், புளியந்தோப்பு மாவட்ட காவல் உதவி ஆணையாளர், கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது
சென்னை, கொடுங்கையூர், சிட்கோ பிரதான சாலையில் தனியார் பால் நிறுவனத்தின் பாலகம் நடத்தி வரும் திரு. சஞ்சய் என்கிற பால் முகவரின் கடைக்கு முன் இறக்கி வைக்கப்பட்டிருந்த பாலில் கடந்த ஜூன் மாதம் (24.06.2018) கடைசி ஞாயிறன்று சுமார் 36லிட்டர் பாலினையும், மீண்டும் கடந்த 02.07.2018 திங்கட்கிழமை சுமார் 40லிட்டர் பாலினையும் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றிருந்தார். அந்த மர்ம நபர் பாலினை திருடிச் செல்வது அந்த பாலகத்தில் பொறுத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு படக் கருவியில் (சிசிடிவி) பதிவாகியிருந்தது. இது குறித்து பால் முகவர் சங்கம் அளித்த புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையில் கூறியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது பால் முகவர்கள் சங்கம்.



