செங்கோட்டை: நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் மலைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.




