சகாயம் ஐ.ஏ.எஸ்., – ஊடகங்களால் பெரிய ஆளாக வளர்க்கப்பட்டு வரும் இன்னொரு முகம்! அண்ணன் நல்லவரு, வல்லவரு ரேஞ்சுக்கு ஊடகங்கள் அவர் குறித்து வரும் செய்திகளால் இளைஞர்கள் ஒரு புறம் ஈர்க்கப் படுகிறார்கள் என்றால், இன்னொரு புறம் சமூக சேவை, அமைப்பு என்று குழு ரீதியாக இயங்கி அரசியலில் இறங்கும் அளவுக்கு பொதுமக்களிடம் முன்னிறுத்தப் படுகிறார் என்கிறார்கள் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். சகாயத்தின் பின்னணியில் கிறிஸ்துவ மிஷனரிகளின் ஹிட்டன் அஜண்டா உள்ளது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
இத்தகைய பின்னணியில், இந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல், சகாயத்தால் இயக்கப்படும் மக்கள் பாதை அமைப்பின் அண்மைய நோட்டீஸ் ஒன்று உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பின்னணி குறித்து நெல்லை வாழ் வழக்குரைஞர் கா.குற்றாலநாதன் நம்மிடம் பகிர்ந்தவை…
பிளாஸ்டிக் ஒழிப்பாம்… நிச்சயமாக! ஒழிக்கப் பட வேண்டியது பிளாஸ்டிக்! ஆனால், ஒழிக்கப்பட வேண்டிய பிளாஸ்டிக் பொருட்களோடு தஞ்சை பெரிய கோவில் படத்தை அச்சிட்டு அதைக் குப்பையில் போடுவது ஏன்?
பிளாஸ்டிக் ஒழிப்பவர் – கிறிஸ்துவ சகாயம் ஐஏஎஸ் வகையறா.
இடம் – குழந்தை இயேசு கோவில் எதிரில்! – இந்தப் பின்னணிகளே சாயம் வெளுப்பதற்கான நிலையைக் காட்டுகிறது.
இப்படி எல்லாம் போட்டு, மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறதா சகாயம் குழு? மத மோதலைத் தூண்டும் சகாயம், மக்களுக்குப் பொதுவான IAS பதவிக்கு தகுதியான ஆள்தானா? நேற்று உமாசங்கர்; இன்று சகாயம் – எல்லாம் கிறிஸ்தவ ஏஜெண்டுகள்! என்றார்
மேலும், இது குறித்து அந்த அமைப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாக அவர் கூறியுள்ளார். சகாயம் குழு தஞ்சை பெரிய கோவில் படத்தை நெகிழி குப்பைகளோடு போட்டு நெகிழியை ஒழிப்போம் என்று போட்டுள்ள விளம்பரம் குறித்து, அதில் குறிப்பிட்டிருந்த மூன்று எண்களில் பேசினேன்.
அதில் முதல் எண்ணில் 9384344881 பேசியவர், இது தொடர்பாக நான் பேசத் துவங்கியதும் “நான் பேருந்தில் இருக்கிறேன். பிறகு தொடர்பு கொள்கிறேன்” என அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து தொடர்பு கொண்டால் இனைப்பில் வருகிறார். ஆனால் எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறார். சுற்றுப்புற சத்தம் மட்டுமே நமக்கு கேட்கிறது
மூன்றாவது எண்ணை (7871117214) தொடர்பு கொண்டோம் . அவர் பெயர் *யாசர்* என கூறினார். அவரிடம் நெகிழி குப்பைகளோடு ஏன் பெரிய கோவில் படத்தைப் போட்டீர்கள் என கேட்டதற்கு எதை எங்கு போட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என ஆணவமாகக் கூறி மேற்கொண்டு பேசுவதற்குள் தான் அலுவலகத்தில் இருப்பதாகக் கூறி துண்டித்துவிட்டார்.
9994611156 நடுவில் உள்ள எண்ணில் கபில் என்பவர் பேசினார். அவர் இது பற்றிய செய்தி தனக்கு வந்ததாகவும் அதில் பெரிய கோவில் படத்தை நீக்க சொல்லியுள்ளதாகவும் கூறினார். நோட்டீஸில் எப்படி நீக்குவீர்கள் என்று கேட்டதற்கு, தான் அலுவலகத்தில் இருப்பதாகவும் மாலை அழைப்பதாகவும் கூறினார் … என்றார் கா.குற்றாலநாதன்.
இதன் பின்னர் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதை அடுத்து, குறிப்பிட்ட எண்களுக்கு இன்னும் ஓரிருவர் போன் செய்து, ஏன் தஞ்சைப் பெரிய கோவில் படத்தை நெகிழிக் குப்பை எனும் சிம்பாலிக் படத்தின் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டதாகவும், சிலர் ஓங்கி உரத்த குரலில் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பதிவு செய்துள்ளனர்.






தஞà¯à®šà¯ˆ காவல௠தà¯à®±à¯ˆà®¯à®¿à®©à®°à¯ உணà¯à®®à¯ˆà®¯à¯ˆ கணà¯à®Ÿà®±à®¿à®¨à¯à®¤à¯ இநà¯à®¤ செயà¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ அடிபà¯à®ªà®Ÿà¯ˆà®¯à®¿à®²à¯ உடனே நடவடிகà¯à®•ை எடà¯à®¤à¯à®¤à¯ அசமà¯à®ªà®¾à®µà®¿à®¤à®®à¯ à®à®±à¯à®ªà®Ÿà®¾à®®à®²à¯ தடà¯à®•à¯à®•வேணà¯à®Ÿà¯à®®à¯.