ஜூலை 12ஆம் தேதியிட்ட ‘தி ஹிந்து’ பத்திரிக்கையில், ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் உத்ஸவர் விக்ரகங்கள் களவாடப்பட்டு விட்டதாக ஒரு தகவல் வெளியிடப் பட்டுள்ளது..
கடந்த பல வருடங்களாக அரங்கநாதர் உத்ஸவர் திருமேனியை மிக மிக அருகில் தரிசித்து வருகின்றவன், சுமார் 35,000 படங்கள் அவரை எடுத்தவன் என்கிற வகையிலும் .. மேலும் ஸ்ரீரங்கம் பற்றிய பல சரித்திர தரவுகள் படித்தவன் என்கிற முறையிலும் சொல்லப் போனால், இது ஒரு அடாத செய்தி .
மூலவர் திருமேனி சுதை (சுண்ணாம்பு) அது 12 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் .. அதில் சில வேறுபாடுகள் பலர் சொல்லிக் கேள்வி. அதை சிறிது நொடிகளே சேவிக்க அனுமதிக்கப்படும். என் போன்றவனால் அதை அனுமானிக்க முடியாது ..
நான் அவரை, சயனித்திருக்கும் பெரிய பெருமாளை ஒரு நிறைந்த இறை அம்சமாகப் பார்க்கும்போது .. வேறு கோணத்தில் காணத் தோன்றியதில்லை. நம்பெருமாள் (உத்ஸவ மூர்த்தி ) முகத்தில் சிறிய மாற்றங்கள் செய்தார்கள் என்பது மட்டும் அறிவேன்.
இவை இரண்டும் களவாடப்பட்ட பொருள்கள் படியலில் சேர்த்து, ஹிந்து மதம் சாராத ஒரு நிருபர், தி ஹிந்து பத்திரிக்கையில் செய்தியாகப் போட்டு இருப்பது .. எதையும் விசாரிக்காமல் தான்தோன்றித் தனமான விஷமப் பிரசாரமாகவே படுகிறது.
நாளை இதைக் கேட்டு வடக்கத்திய மற்றும் திராவிட சார்புடைய நீதிபதிகள், ஒரு பெட்டியில் நம்பெருமாளை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஆணையிடலாம் !!!
அரசு கோவில் விஷயத்தில் தலையிடுவது பற்றிய எனது எண்ணத்தில் மாற்றமில்லை. நீதி கேட்டு நீதிமன்றத்துக்கு செல்லும்போது, பழனி கோவில் விக்ரகத்தை கோர்டுக்கு எடுத்து வருக என்று சொல்லுவது நல்லது என்கிறது போல ஒரு எண்ணம் இந்தச் செய்தி போடச் செய்த பக்தர் ஒரு கணம் சிந்தித்தால் நலம்.
– விஜயராகவன் கிருஷ்ணன்




