திருவாருர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடிகொண்டான் காசி விஸ்வநாதர் கோயில் குளத்தை தூர் வாரிய போது, பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது.
எல்.முருகன் தலைமையில் குழுவினர் குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, குளத்தில் சுமார் 3 அடி உயரம் கொண்ட பெருமாள் கற் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் எல்.முருகன் சன்னாநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் கண்ணாவிடம் தெரிவித்தார். அவர் அந்தச் சிலையை நன்னிலம் வட்டாட்சியர் இரா.பரஞ்ஜோதி தலைமையில் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.