குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்!

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடக்கம்: மாவட்ட கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில், குற்றாலம் சாரல் திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்குகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளது. சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசுவதுடன் அருவிகளில் சீராகத் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், ஆண்டுதோறும் அரசின் சார்பாக நடத்தப்படும் சாரல் திருவிழாவை வரும் 28-ம் தேதி முதல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

IMG 20180725 111936 - 2026கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஸ், “சாரல் திருவிழாவுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் குற்றலாத்துக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதனால் அங்கு வரக்கூடியவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, போக்குவரத்தை ஒழுங்கு செய்வது, அருவிகளில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி சமூக விரோதச் செயல் நடைபெறாதவாறு காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் நன்றாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணித்திட வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறைப் பகுதிகளில் கூடுதலாகப் பெண் காவலர்களை நியமித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும். விபத்து மீட்புப் பணிகளுக்கு 108 அவசர கால ஊர்தியைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாகக் கூடுதல் பேருந்து வசதிகளைச் செய்திட வேண்டும். காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்பதை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். பெண்கள் உடை மாற்றும் பகுதியில் துப்புரவுப் பணி மற்றும் கட்டணம் வசூல் பணிகளில் சீருடை அணிந்த பெண்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். வரும் 28-ம் தேதி ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 8 நாள்கள் சாரல் திருவிழா நடைபெறும்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

அதில், கலை நிகழ்ச்சிகள், நாய் கண்காட்சி, படகுப்போட்டிகள் என நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் முழுவீச்சில் செய்ய வேண்டும் இந்த விழாவில் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதால் விழாவுக்காக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளில் ஒவ்வொரு துறையினரும் முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories