சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கவலையுடன் விசாரித்தபடி, கருணாநிதியின் வீட்டின் முன் தொண்டர்கள் பலர் குவிந்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக போலீஸ் பாதுகாப்பு அந்த இடத்தில் பலப் படுத்தப் பட்டது. இதனால் மேலும் தொண்டர்கள் கூடினர். கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வந்த வண்ணம் இருந்தனர். கமல்ஹாசன், ஜி.கே.வாசன், தமிழக அமைச்சர்கள், துணை முதல்வர் ஓபிஎஸ்., என பலரும் வந்ததால், தொண்டர்களுக்கு சந்தேகம் வலுத்தது.
இந்நிலையில், எவ்வளவோ கூறியும் தொண்டர்கள் கலையாததால், கோபாலபுரம் இல்லத்தின் கதவுகளைப் பூட்டிவிட்டு, ஸ்டாலின் தன் வீட்டுக்குச் சென்றார்.





