கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருது கிடைக்கும் என்று கூறினார், காங்கிரஸ் கட்சியின் நடிகை குஷ்பு.
சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கலைஞரை பார்க்க தான் தில்லியில் இருந்து வந்து இருக்கிறேன். கலைஞருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று எல்லாரும் பிராத்தனை செய்து கொண்டு இருக்கிறோம்.
தமிழகத்திற்கு கலைஞரைப் போல் ஒரு தலைவரோ அரசியல் சாணக்கியனோ கிடைப்பாரா என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்த கலைஞருக்கு உலக சாதனையாளர் விருது கிடைக்கும்.
நான் திமுகவில் இருந்து வந்தவள். அவர் போல் ஒரு தலைவர் என்றும் இருப்பார். அவருக்கு எதுவுமே ஆகிவிடாது… என்று கூறினார்.




