- ஆயுதப்படை காவலர்கள் அரை மணி நேரத்தில் ராஜாஜி ஹால், ராஜ ரத்தினம் ஸ்டேடியம், பகுதிகளில் ஆஜராக வேண்டும் என காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவு.
- அனைத்து காவல் நிலைய காவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு கூடுதல் போலீசார் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
சென்னையில் கருணாநிதி அனுமதிக்கப் பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு கூடுதல் போலீஸார் குவிக்கப் பட்டு, தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் எதுவும் அந்தப் பகுதியில் அனுமதிக்கப் படவில்லை. சென்னை மவுண்ட் ரோடில் இருந்து மயிலாப்பூர் செல்லும் வாகனங்களும் டிடிகே சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
காவேரி மருத்துவமனைக்குள் மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சென்று பார்த்தனர். சென்னை துணை ஆணையர்கள் உடனடியாக தங்களது சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்ல உத்தரவு என தகவல் வெளியாளது. அனைத்து காவல்நிலைய காவலர்களும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காவலர்கள் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு வருமாறு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் அனுப்பப் பட்டது. தி.மு.க தொண்டர்கள் அதிக அளவில் காவேரி மருத்துவமனையை நோக்கி வந்த வண்ணம் உள்ளதால், அவர்களைக் கட்டுப் படுத்தும் பணியில் பெரிதும் சிரமப் பட்டு வருகின்றனர் காவல் துறையினர்.




