சென்னை: உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான் என்றும், அது தற்காலிகப் பின்னடைவே என்றும் கூறினார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.
காவேரி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை குறித்தும் விளக்கம் அளித்தார். கருணாநிதி உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவை மருத்துவர்கள் குழு சீர் செய்துவிட்டதாகவும், தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தொண்டர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார் ஆ.ராசா.



