கடையநல்லூர்: நல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லுாரி அங்கீகாரம் திடீர் ரத்து ஆனதில், 137 மாணவ, மாணவிகள் நிலை பரிதாபமாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் செயல்பட்டு வரும் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லூரியில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் 137 மாணவர்களின் படிப்பு மற்றும் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரி மீத இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து மாணவர்கள் செலுத்திய பணத்தை மீட்டு, படிப்பைத் தொடர மாற்றுவழி ஏற்பாடு செய்து தருமாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டதைத் தொடர்ந்து இங்கே 2014ஆம் ஆண்டு முதல் 2018-வரை மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் 2014-2015ஆம் கல்வியாண்டில் உள்ள மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி யுள்ளனர். இந்நிலையில் கல்லூரியில் தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டது.
இதனால் இங்கே சேர்ந்த பயின்று வரும் 137 மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டதுடன் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகியுள்ளது. படிப்பைத் தொடர முடியாமலும் , தேர்வு எழுத முடியாமலும் உள்ளது.
ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் சுமார் 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கல்லூரி நிர்வாகம் கட்டணமாக வசூலித்து பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து, மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிய பணம் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.





கலà¯à®µà®¿à®•à¯à®•ூடஙà¯à®•ளில௠கொளà¯à®³à¯ˆ எனà¯à®± செயà¯à®¤à®¿ அதிகமாக வரà¯à®•ிறதà¯. தகà¯à®• நடவடிகà¯à®•ை எடà¯à®¤à¯à®¤à¯, அநà¯à®¤ நிரà¯à®µà®¾à®•தà¯à®¤à¯à®•à¯à®•௠தணà¯à®Ÿà®©à¯ˆ கொடà¯à®•à¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯, அதà¯à®¤à¯à®Ÿà®©à¯ அநà¯à®¤ மாணவரà¯à®•ளின௠எதிரà¯à®•ாலதà¯à®¤à¯à®•à¯à®•à¯à®®à¯ அரச௠உதவ வேணà¯à®Ÿà¯à®®à¯.