செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஆனந்த் நெல்லைக்கு பணி மாறுதல் பெற்றுச் செல்கிறார். அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரது சிறப்பான பணிகளை நினைவு கூர்ந்து பாராட்டினர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இரண்டு கேட்கள் உண்டு. மேம்பால நடைமேடை வழியே வெளியே வரும் பகுதியில் முன்னுள்ள சிறிய இடத்தில் அங்கே நிறுத்துவதற்கு உரிய உரிமம் இல்லாத ஆட்டோக்களை நிறுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து ரூ.500 அபராதம் விதித்து கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்தியவர் உதவி ஆய்வாளராகப் பணி செய்த ஆனந்த்.

இருப்பினும், வயதானவர்களை 3வது 4வது நடைமேடைக்கு அழைத்துச் செல்லும் போது, இந்த வாசல் வழியேதான் ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்றி இறக்கி உதவுவதுண்டு. அதற்கே அனுமதிக்காமல் கடுமை காட்டியவர் ஆனந்த் என்று சில ஆட்டோ ஓட்டுநர்கள் நினைவு கூர்ந்தனர்.
நெல்லையிலும் இவரது பணி சிறக்க வாழ்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளராக மனோஜ்குமார் பொறுப்பு ஏற்றார். இவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.




