சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சென்னை வருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் திமுக., தலைவர் கருணாநிதி. அவரை நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரை அனைவரும் வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, திமுக., செயல் தலைவர் ஸ்டாலினிடம் கருணாநிதியின் நலம் விசாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.




