சென்னை: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் அருகே ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்காணிப்புப் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து செங்கல்பட்டு, தாம்பரம் இடையே ரயில் போக்குவரத்து 2 மணி நேரம் நிறுத்தப் பட்டு, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
புறநகர் மற்றும் சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் முன்னதாக நிறுத்தப் பட்டு ஒவ்வொன்றாக விடப்பட்டன. இதற்கு நாசவேலை காரணமா என ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.




