சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக., தொண்டர்கள் தங்களது குடும்பத்துடன் மருத்துவமனை முன் குவிந்திருக்கின்றனர்.
இதை அடுத்து காவேரி மருத்துவமனை பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தியை டி.வி யில் பார்த்த அதிர்ச்சியில் திமுக நிர்வாகி மாரடைப்பால் உயிரிழந்தார்.




