சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் காலையில் தெரிவித்த போது, அபாயக் கட்டத்தில் இருப்பதாகக் கூறியிருந்தனர். இந்நிலையில், அடுத்த கட்ட அறிக்கையை இன்று மாலை 4.30க்கு வெளியிடுவதாக அறிவித்தனர்.
இதனிடையே, துரைமுருகன் கண்ணீர் விட்டபடி காணப்பட்டார். கருணாநிதியின் ஆசைப்படி மெரினாவில் இடம் தேடிச் சென்ற ஸ்டாலின் குழு, எண்ணம் நிறைவேறாத நிலையில் திரும்பியது. இந்நிலையில் துரைமுருகன் கண்ணீர் விட்டவாறு காவேரி மருத்துவமனைக்குள் சென்றார்.
இதனிடையே, காவேரி மருத்துவமனை மாலை 4.30 க்கு அறிக்கை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது 6 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாலை 6 மணிக்குப் பிறகே நிலவரம் என்ன என்பது தெரியவரும்.




