நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக நேற்று மாலை முதலே அருவிகளில் நீர் வரத்து கூடியிருந்தது. இந்நிலையில் இன்று பாதுகாப்பு வளைவையும் தாண்டி அருவி நீர் விழுகிறது.
இதனால் இன்று காலை முதல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டது. பெரும்பாலான பேருந்துகள் இயங்காத நிலையில், அருவிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.




