திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதை அடுத்து கருணாநிதி நினைவிடம் அமையப் பெறுவதற்கான மாதிரி வரைபடத்தை திமுக., வழங்கியது. இதற்கு நீதிமன்றமும் அப்படியே ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து சென்னை மெரினாவில் நீதிமன்றத்தின் விருப்பப் படி அவரின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கின.
அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோருக்கு அமைக்கப் பட்டுள்ள நினைவிடங்களுக்கு இடையே கருணாநிதியின் நினைவிடம் அமைகிறது. எம்ஜிஆர்., அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு இணையாக கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்படுகிறது தற்பாெழுது கட்டுமானத்திற்க்கு தேவையான செங்கல், சிமிண்ட், கற்கள் மணல் உள்ளிட்ட பொருள்கள் அங்கே குவிக்கப் பட்டு வருகின்றன.



திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.