புது தில்லி: புதிய ரயில்வே கால அட்டவணை சுதந்திர தினமான நாளை இணைய தளத்தில் வெளியாகும் என்று கூறப் பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதை அடுத்து இந்த ஆண்டுக்கான புதிய ரயில்வே அட்டவணை தயாரிப்பில் கால தாமதம் ஏற்பட்டது. இதை அடுத்து புதிய ரயில்வே கால அட்டவணை வெளியீடு ஆகஸ்டு 14 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை ஆக.15 அன்று புதிய அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த முறை புதிய ரயில்வே கால அட்டவணையை ஐ.ஆர்.சி.டி.சி. தயாரித்துள்ளது. இது நாளை (ஆக.15) முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய கால அட்டவணையில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பல விரைவு ரயில்களின் புறப்படும் நேரமும் சேரும் நேரமும் மாற்றப்பட உள்ளது. தாம்பரம்- செங்கோட்டை அந்த்யோதயா ரயில் உள்ளிட்ட ரயில்கள் இதில் இணைக்கப்படலாம் என்று தெரிகிறது.
புதிய கால அட்டவணையைப் புத்தகமாக அச்சிடும் பணி மும்பையில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் புத்தகங்கள் ரயில்நிலையங்களில் விற்பனைக்கு வருகிறது.





