தமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படும் இடங்கள் குறித்து தமிழக பாஜக செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
நாளை நமது முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு தில்லியில் மாலை 4 மணிக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் வாஜ்பாய் அவர்களின் அஸ்தி அந்தந்த மாநிலத்தில் கரைப்பதற்காக அந்தந்த மாநில தலைவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தமிழகத்தில் கரைப்பதற்காக மாநில தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அஸ்தியை பெற்றுக் கொண்டு செவ்வாய்க்கிழமை தமிழகம் வந்த பின் பொதுமக்கள் அஞ்சலிக்காக கமலாலயத்தில் வைக்கப்பட்டு பின்பு தமிழகத்தில் 6 இடங்களில் ஊர்வலமாகச் சென்று அஸ்தி கரைக்கப்படும்.
இடங்கள் : சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமாரி, மதுரை – வைகை, ஈரோடு – பவானி, ஸ்ரீரங்கம் – காவிரி.
நாளை தில்லியில் நடைபெறும் அஞ்சலிக் கூட்டத்தில் அஸ்தியை பெற்றுச் செல்லும் இந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜனுடன் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் H. ராஜா, முன்னாள் மாநில தலைவர்கள் இல. கணேசன்,CP. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்… என்று கூறப்பட்டுள்ளது.




