மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப் பட்டு உத்தராகண்ட் மாநிலத்தில் யாத்திரையாகக் கொண்டு செல்லப்பட்டது.
பன்னா லால் பல்லா நகராட்சிக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட யாத்திரை பிரேம் ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் கங்கையின் ஹர் கி பவுரி காட் பகுதியை அடைந்தது.
வேத மந்திர கோஷம் ஒலிக்க வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா, வாஜ்பாய் அஸ்தியை கங்கை நீரில் கரைத்தார். இந்தச் சடங்கில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் ராவத், வாஜ்பாயின் பேத்தி நிஹாரிகா மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள், பா.ஜ.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



