
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென்வட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச் சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் 10% உயரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.



