தனது பதவியேற்பு விழாவிற்காக பாகிஸ்தான் வந்த சித்துவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
மேலும் இதுகுறித்து டுவிட்டரில் அவர், “சித்து அமைதிக்கான தூதர் அவருக்கு பாகிஸ்தான் மக்கள் அன்பையும் வாழ்த்துகளையும் அளித்துள்ளனர். இந்தியாவில் அவரை விமர்சிப்பவர்கள் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்துகின்றனர். அமைதி ஏற்படாமல், மக்கள் வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படாது” என்றார்




