
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம், தென்காசியில் மஸ்ஜிதூர் ரஹ்மான் ஜீம்ஆ பள்ளிவாசல் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
முஸ்தபியா நடுநிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த கூட்டு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காயிதே மில்லத் திடலில் இன்று காலை பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஆறு இடங்களில் நடந்த பெருநாள் தொழுகையில் கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் என பல்லாயிரக்கணக்கானோர் கூடி பெருநாள் தொழுகையை நடத்தினர்.
இந்த தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மை குழு தலைவர் அப்துன்நாசிர் நடத்தினார். இந்த தொழுகையின் போது கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் கேரள மக்கள் மறுவாழ்வு பெற வேண்டி நிதி வசூல் செய்யப்பட்டது.




