திருமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் மற்றும் துணைத் தேர்வுக்கான தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் மீண்டும் மோதிக் கொண்டனர். அப்போது, வாக்குச்சீட்டுகள் கிழித்து எறியப் பட்டன. ஓட்டுப் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் அணியினர் சாலை மறியலில் இறங்கினர். தாங்கள் ஒதுக்கப்படுவதாக அமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறிய ஓபிஎஸ் அணியினரால், தேர்தல் நடைபெறவில்லை; இந்தக் களேபரத்தைக் கண்டு அதிகாரிகள் தப்பி ஓடினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க கட்டிட வங்கி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இன்று நடைபெற இருந்த தேர்தலில் வங்கியின் உள்ளே ஓட்டுப் பெட்டி மற்றும் வாக்குச்சீட்டுகளை கிழித்தெறிந்து அராஜகம் செய்ததால், தேர்தல் அதிகாரிகள் தப்பி ஓடிவிட்டனர்,
தேர்தல் நடைபெறாததால் ஓபிஎஸ் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், திருமங்கலம் தொகுதியில் ஓபிஎஸ் அணியினர் ஒதுக்கப்படுவதாக அமைச்சர் மீது குற்றம் சாட்டினர்.
திருமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி கட்டிட சங்க வங்கிக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 11 நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அழகர் தலைமையில் 4 பேர் எடப்பாடி அணியிலும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் 7பேர் ஓபிஎஸ் அணியிலும் களத்தில் இருந்தனர்
கடந்த 21ம் தேதி தலைவருக்கான தேர்தல் ஓ பி எஸ் அணியைச் சேர்ந்த நிரஞ்சன் தன்னுடைய அண்ணன் திமுக நகர பொறுப்பாளர் முருகன் பிரச்சினை செய்ததால் அன்று தேர்தல் 24ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது
இந்நிலையில் இன்று தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது மேலும் உச்சநீதிமன்ற படி இன்று தேர்தல் நடைபெறும் என சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது
இன்று காலை முதல் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியில் இடையே யார் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்த பிரச்னை உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடைபெற இருந்த 12 மணிக்கு பாதுகாப்பில் இருந்த பாதி போலீசார் விலக்கிக் கொள்ளப்பட்டனர்
இந்நிலையில் வங்கியை பூட்டிவிட்டு வங்கிக்குள் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதில் எடப்பாடி அணியைச் சேர்ந்த அழகர் தலைமையில் ஆதரவாளர்கள் வாக்குச்சீட்டுகளை கிழித்து ஓட்டுப் பெட்டியை தூக்கி எறிந்தனர். இதனால் தேர்தல் அதிகாரி கண்ணன் பின்வாசல் வழியாக தப்பி ஓடி விட்டார். பின்னர் வங்கி கதவை வங்கி ஊழியர்கள் அடைத்துவிட்டுச்சென்றனர்
தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப் படவில்லை. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் நகரமன்ற தலைவர் நிரஞ்சன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருமங்கலம் தொகுதியில் ஒட்டுமொத்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் உதயகுமார் இருப்பதால் அதிமுகவினர் இடையே மோதல் உருவாகும் நிலை உள்ளது எனவும் குற்றம் சாட்டினர்
சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் அணியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் முற்றிலும் ஓபிஎஸ் அணியை புறக்கணிப்பதால் கட்சி உடையும் சூழல் ஏற்படுவதாக ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.




