தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவரும் கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் பாதையில் ஸ்டாலினும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக அந்த தலைவர்கள் வழியில் வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
கழக பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுத்தமைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்ளுகின்றேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




