தென்காசியில் பல இடங்களில் சுவர்களில் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்று இருந்த சுவர்கள் பலவற்றை பளிச் ஆக்க திட்டம் போட்டு வருகிறார் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன்.
அதன் ஒரு பகுதியாக, போஸ்டர் ஒட்டும் சுவர்களில் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் வாசகங்களை எழுத வைத்து வருகிறார்.
தென்காசியில் சாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில், அமைப்பினர் சிலர் வாசகங்களை எழுதி வைத்து பதற்றத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. எந்தச் சுவரை எடுத்தாலும் அதில் எதையாவது எழுதி வைத்து மோதல்களைத்
தூண்டிவிடுவதை காவல் துறை கண்காணித்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போல் அரசு அலுவலக, தொடர்புடைய கட்டட சுவர்களிலாவது அழகிய ஓவியங்களை வரைந்து வைத்து, போஸ்டர்கள் ஒட்டுவதையும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் வாசகங்களை எழுதுவதை தடை செய்தும் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே தென்காசி வாழ் பொதுமக்களின் எதிர்பார்ப்பு!




