முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மதுசூதனன் இன்று சந்தித்தார்.
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்ற மதுசூதனன், ஆர்.கே.நகர் உட்கட்சி விவகாரம் குறித்தே பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவரது ஆட்களுக்கும் அமைச்சர் ஜெயக்குமார் ஆட்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும், பத்திரிகையாளர் சந்திப்பை தள்ளிப் போட்டதாகவும் கூறப்படுகிறது.




