புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக் குழுவுக்கு புதிய நீதிபதியாக, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலை நியமித்தது பசுமை தீர்ப்பாயம்.
அவரது தலைமையிலான குழு, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது பற்றி விசாரித்து முடிவு எடுக்கும்.
இந்தக் குழு ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி முடிவெடுக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் தருண் அகர்வால்.




