மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் புதிய ரயில்வே சுரங்கப் பாதையில் நேற்று பெய்த கன மழையில் இரவு சரியாக எட்டு மணி அளவில் ஒரு கார் சுரங்கப் பாதை வழியாக வெளியே செல்ல முயன்ற போது தண்ணிரில், சிக்கி மாட்டிக் கொண்டது. காரிலிருந்தவர் உதவிக்கு குரல் கொடுத்து அழைத்தார்.
அப்போது தற்செயலாக அந்தப் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை அருகில் சென்ற காளமேகம் என்பவர், தண்ணீரில் கார் மாட்டியிருப்பது கண்டு அதிர்ந்து போனார். காருக்குள் ஒருவர் பயந்து நடுங்கியபடி அமர்ந்திருந்ததைக் கண்டு அவரை மீட்க முயன்றார். உடனே அருகில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்களை அழைத்துச் சென்று 5 அடி அளவு ஆழமான நீருக்குள் இறங்கிச் சென்று அவரை வெளியே மீட்டனர். .-
காரில் இருந்து மீட்கப்பட்டவர் மதுரை ஆனையூரைச் சேர்ந்த பரசுராம் என்பவரது மகள் கோவர்தன் (வயது 55) என தெரிய வந்தது. மழை நீர் சிறிது அளவு தான் இருக்கும் என்று எண்ணி சுரங்கப் பாதையில் சென்றுள்ளார்.
பின் தீயணைப்புத் துறையினருக்கும் மற்றும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்து காரை மேடான பகுதிக்கு மீட்டுச் சென்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காருக்குள் ஒருவர் மாட்டிக் கொண்டபோது, கொஞ்சமும் தயங்காமல், துணிந்து செயல்பட்ட அப்பகுதி மக்களுக்கு திருப்பரங்குன்றம் காவல் துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
செய்தி: காளமேகம், மதுரை




