சென்னை: நாளை செப்.5ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் அழகிரி.
சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ரார் திமுக நிர்வாகி ரவி. இதை அடுத்து, ரவியை திமுக.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது திமுக., தலைமை.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் ரவியை தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
அழகிரியை மீண்டும் திமுக.,வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பு சொல்லி வருகிறது. ஆனால், திமுக.,வில் சிலர் விடாப்பிடியாக, அழகிரியை திமுக.,வில் மீண்டும் சேர்க்கக் கூடாது என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அழகிரியை வரவேற்ற ஒருவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால், திமுக.,வில் இருந்து எவரேனும் அழகிரிக்கு ஆதரவாக இருந்தால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப் படுவார்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது திமுக., தலைமை. இதனால் எப்படி ஒரு லட்சம் பேரை பேரணிக்கு அழகிரி திரட்டுகிறார் பார்ப்போம் என்ற எண்ணத்தையும் திமுக., தலைமை வெளிப்படுத்தியுள்ளது.




