சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் விருத்தாசலம், நிலக் கோட்டையில் தலா 2 செ.மீ., வேலூர், வாலாஜா, காஞ்சிபுரத்தில் தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.



