
சென்னை : சென்னைக்கு வந்திருந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந்தார். அங்கே, அவரை வரவேற்றனர் திமுக தலைவர் மு.க.,ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர்.
அப்போது, கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு மலக்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினார் பிரணாப் முகர்ஜி.
இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி, ‘கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தின் போது பங்கேற்க முடியாததால் கோபாலபுரம் வந்தேன்’ என்று கூறினார்.



