செங்கோட்டை: அரசுப் பேருந்தில் அரிசிக் கடத்தல் நடப்பது கண்டறியப் பட்டு, தாசில்தாரால் தடுக்கப் பட்டது.
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து அரசுப் பேரூந்தில் கேரளாவுக்கு அரிசி கடத்தப் படுவதாக வந்த தகவலை அடுத்து, தாலுகா அலுவலர் சோதனை நடத்தினார்.
அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட சுமார் 20 மூட்டை ரேசன் அரிசி, செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் சிவில் சப்ளை தாசில்தார் அழகப்ப ராஜா நடத்திய சோதனையின் போது பிடி பட்டது.



