தென்காசி: நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெப்ப நிலையே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே குளிர்ந்த காற்றும் இல்லாமல், வெயிலின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், அருவிகளில் நீர் வரத்து குறைந்தே உள்ளது.
வார நாட்களில் சுற்றுலா பயணியரின் கூட்டம் குறைந்தே இருந்தது. இருப்பினும், சனி, ஞாயிறு வார இறுதி நாட்களில் ஓரளவு சுற்றுலா பயணியரின் வருகை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுவதால், சீஸனை அனுபவிக்கலாம் என்று எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடையக்கூடும்!




