கருணாநிதி, தன் உடனேயே வைத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலினை முன்னிலைப் படுத்தினார். ஸ்டாலினின் தலைமைப் பாதைக்காக, வழியில் பட்ட தடைக் கற்களான வை.கோபால்சாமியை விரட்டியடித்தார். தன் மகனென்றும் பாராமல் அழகிரியையே அடித்து விரட்டினார்.
இப்போது ஸ்டாலின், தன் மகன் உதயநிதியைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறார். அன்று ஸ்டாலினுக்கு திமுக.,வினர் தாமாக முன்வந்து முக்கியத்துவம் தந்தது போல், இப்போது உதயநிதிக்கு திமுக.,வினர் முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கின்றனர்.
அன்று மக்கள் முன்னிலையில் தன் முகம் பழக்கமாக வேண்டும் என்பதற்காக, தூர்தர்ஷன் தொடரில் நடித்தார் ஸ்டாலின். சினிமா பக்கம் போகாவிட்டாலும், டிவி., மூலம் மக்களிடம் செல்வாக்கு பெற நினைத்தார். இன்று உதயநிதி சினிமாவின் மூலமே செல்வாக்கு பெற முயன்று கொண்டிருக்கிறார். இருப்பினும், இதுவரை சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்த உதயநிதி இனி அரசியலிலும் கவனம் செலுத்தக் கூடும்!
அண்மையில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொதுக் குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. அதில், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதியின் படமும் இடம் பெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களாக இருந்த டிஆர் பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மூத்த தலைவர் எல்.கணேசன், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சை இளைஞர் அணியின் நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அத மேடையில் வைக்கப் பட்டிருந்த பேனரில் கருணாநிதி, ஸ்டாலினை அடுத்து, உதயநிதியின் படம் இடம் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தைப் போட்டு, திமுக.,வின் தொண்டர் ஒருவர், டிவிட்டர் பதிவில் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். அது கொஞ்சம் காரசாரமாகவே இருந்துள்ளது.
Mr @Udhaystalin ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா?
உங்களுக்கு தோணலையா?
முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன? pic.twitter.com/jipMT6ozOD
— Shamurai (@Shamurai10) September 7, 2018
முன்னணித் தலைவர்கள் இடம்பெற்ற மேடையில் உங்க படம் இடம்பெற என்ன தகுதி இருக்கு என்று கேட்ட கேள்விக்கு உதயநிதி பொறுமையாக… தவறு இனி இப்படி நடக்காது என்று பதில் கூறியுள்ளார்.. அவரது டிவிட்டர் பதிவில்! அவரது பதில் இது…
தவறு! மீண்டும் நடக்காது! https://t.co/OseQJd2WF4
— Udhay (@Udhaystalin) September 7, 2018
இப்படி எல்லாம் யோசித்து பதில் கொடுத்திருந்தால், ஸ்டாலின் இன்று தலைவராகியிருக்க முடியாதுதான்!




