திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் வனப்பகுதியில் புள்ளி மானை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதை அடுத்து செங்கம் வனத் துறை அதிகாரி இராமநாதன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அடிவாரம் பகுதியை சேர்ந்த முருகன் (28) மற்றும் வீரானந்தல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (38) ஆகிய இரண்டு பேர் சிக்கினர்.
அவர்கள் இருவரும் புள்ளிமானை வேட்டையாடி 25 கிலோ இறைச்சி மற்றும் கள்ள துப்பாக்கியுடன் பிடிபட்டனர். வனத்துறையினர் இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.




